சூத்தடிக்கும் விதங்கள் (அறிமுகம்)

சூத்தடிக்கும் விதங்கள் (அறிமுகம்)

Jan 01, 2022

அறிமுகம்

சூத்தடித்தல் அல்லது குதவழிப் புணர்ச்சி என்பது காம இச்சைக்காக ஒருவன் தனது விரைத்த சுன்னியை (ஆணுறுப்பு அல்லது பூல்) மற்றொரு நபரின் சூத்தின் (குதம் அல்லது மலவாய்) வழியாக மலக்குடலின் ஊடே அடிவயிற்றில் செலுத்தி புணர்வதாகும். ஆண்களை சூத்தடித்தல், இச்சை கருவிகளை (sex toys) பயன்படுத்துதல், சூத்தை நக்குதல் (anilingus) மற்றும் விரலிடுதல் (fingering) போன்றவை வழக்கமான செயல்முறைகளாகும். பெரும்பாலும் உடலுறவு என்பது கூதியில் (பெண்ணுறுப்பில்) சுன்னியை (ஆணுறுப்பை) கொண்டு புணர்வதாக கருதப்பட்டாலும், சூத்தடித்தலும் அலாதியான காம இன்பத்தை தரும் செயல்பாடாக கருதப்படுகிறது. சூத்தடித்தல் ஓரினச்சேர்க்கையில் அதிகம் நடைபெறுகிறது.

இருவருக்கும் இன்பம்

சூத்தடிப்பதன் மூலம் சூத்தடிப்பவர், சூத்தடிக்க படுபவர் இருவருக்குமே காம இன்பம் கிடைக்கும். காம இச்சை என்பது சுன்னி மற்றும் கூதியில் மட்டுமே உணரக்கூடியது இல்லை, காம இச்சையை தூண்டும் மற்ற உறுப்புகளும் இருக்கின்றன. அப்படியான உறுப்புதான் மலக்குடல். நம்முடைய அடிவயிறு மற்றும் மல வாயில் அதிகப்படியான நரம்பு முடிவுகள் இருக்கின்றன. விரைத்த ஆணுறப்பை உள்ளே செலுத்தும்போது நரம்பு முடிவுகள் காம கிளர்ச்சியை ஏற்படுத்தும் இதனால் சூத்தடிக்க படுபவர் அதிகமாக இன்புறுவர். ஆண்கள் சூத்தடிக்க படும்போது பெண்களை விட ஆண்கள் அதிக இன்பத்தை பெறலாம், ஏனெனில் அடிவயிற்றில் நுழையும் ஆணுறுப்பு விந்து சுரப்பியில் அழுத்தத்தை ஏற்படுத்தி இச்சையை தரும்.

சூத்தடித்தலும் சமூகமும் 

சூத்தடித்தல் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறாக இருக்கிறது. தெற்காசியாவில் சூத்தடித்தல் இழிவான செயலாக கருதப்படுகிறது. மேற்க்கத்திய நாடுகள் முதலில் இதை இயற்கைக்கு எதிரானதாக கருதினாலும், இப்போது சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் சூத்தடித்தல் என்பது, தலையை துண்டித்தல், உயிருடன் எரித்தல் மற்றும் உடல் உறுப்புகளை வெட்டுதல் போன்ற மோசமான தண்டனைகளுக்கு உட்பட்ட குற்றமாக இருக்கிறது. பண்டைய சுமேரிய, கிரேக்க மற்றும் ரோமானிய நாகரிங்களில் இது வழக்கமான செயல்முறையாக கருதப்பட்டது. இசுலாமியமும் கிருத்துவமும் இதை தவறான செயலாக கருதுகிறது. சில சமயங்களில் சூத்தடிப்பவர் ஆண்தன்மை கொண்டவராகவும் உயர்வானவராகவும் கருதப்படுகின்றனர். சூத்தடிக்க படுபவர் பெண் தன்மை கொண்டவராகவும் இழிவானவராகவும் கருதப்படுகின்றனர். சிலர் சூத்தடித்தல் என்பது இன்பம் சார்ந்தது, இதில் உயர்வு தாழ்வு இல்லை எனவும் கூறுகின்றனர்.

நன்மைகள்

  1. சுன்னி மற்றும் கூதிவழி உடலுறவு அளவிற்கு இன்பத்தை தராதபோதிலும் போதுமான காம இச்சையை தருவதால் மாற்று பாலீர்ப்பாளர்களுக்கு பேருதவியாக அமைகிறது.

  2. கருவுருவதில் இருந்து பாதுகாப்பான உடலுறவுக்கு வழிவகுக்கிறது. தற்காலிக கருத்தடைக்கு மருந்துகளை பயன்படுத்துவதைவிட பாதுகாப்பானது.

  3. ஆண்கள் ஆண்டுகளுக்குள்ளாகவே உடலுறவு வைத்துக் கொள்வதன் மூலம், உடலுறவின் காரணமாக வரும் மன அழுத்தம் மற்றும் காம வேட்கையை குறைக்கிறது.

  4. ஓரினச்சேர்க்கைக்கு உதவுவதன் மூலம் பெண்களின் மீதான பாலியல் குற்றங்களை தவிர்க்க உதவுகிறது. 

தீமைகள்

  1. சமூக காரணங்களால், உலகின் பல பகுதிகளில் நீங்கள் மிகவும் மோசமான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படலாம்.

  2. ஓரினச் சேர்க்கையின் காரணமாக கேலி கிண்டல்கள் மற்றும் இழிவுப்படுத்தலுக்கு ஆளாகலாம். சிலருக்கு குற்றவுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற தீவிர மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

  3. மலக்குடல் மனிதர்களுக்கு மிகவும் முக்கிய உறுப்பு. சரியாக கையாள படாவிட்டால் காயங்கள் ஏற்பட்டு புற்றுநோய் போன்ற நிலைகளுக்கு வித்திடும். முறைப்படுத்தப்படாத செயல்கள் அடிவயிற்று பகுதிகளில் உள்ள உறுப்புகளையும் பாதிக்கலாம்.

  4. HIV போன்ற மோசமான பால்வினை தொற்றுகளை ஏற்படுத்தலாம். ஆணுறைகளை பயன்படுத்தினாலும் இந்த மாதிரியான நோய்களை 100% தவிர்ப்பது சாத்தியமில்லை.

முடிவுரை

உடலுறவும் காமமும் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கம். சூத்தடித்தலின் நன்மைகள் தற்காலிகமானவை, தீமைகள் தவிர்க்கப்பட கூடியவை. நீங்கள் காமம் என்ற மாய வலையில் வீழ்ந்து வாழ்க்கையை தொலைக்காமல் அன்பு, செல்வம், புகழ் போன்ற மற்ற இன்பங்களையும் பெற முயலுங்கள். காமம் என்பது தவறில்லை என்பதை புரிந்து மன நலத்தை பேணுங்கள். பால்வினை தொற்றை தவிர்க்க குறிப்பிட்ட நபர்களுடன் மட்டும் உடலுறவு கொள்ளுங்கள். preEP போன்ற நவீன முறைகளை கையாளுங்கள். காமம் முக்கிய மறைபொருள், வாழ்க்கை அதனினும் பெரிது. தேவை இருப்பின் உங்களுடைய பாதுகாப்பான இச்சை மிக்க சூத்தடித்தலுக்கு வாழ்த்துக்கள்!


இங்கனம்,

காமதேசி

இதுபோன்ற தகவல்களை ஆய்ந்து உங்களிடம் கொண்டு வர நான் அதிகளவிலான முயற்சி மற்றும் நேரத்தை செலவிட்டிருக்கிறேன். இது உங்களுக்கு உதவியாக இருந்தது மற்றும் நான் இவ்வாறான உறைகளை தொடர வேண்டும் என கருதினால் உங்களால் இயன்ற தொகையை நிதியுதவியாகவோ அல்லது அன்பளிப்பாகவோ வழங்கலாம். மேலும் தகவல்களுக்கு என்னை சமூக வலைதளங்களில் அணுகலாம்.

நிதுயுதவியளிக்க

UPI: kaamadesi@upi

Other Methods: buymeacoffee.com/kaamadesi

பின்தொடர

Twitter: twitter.com/kaamadesi

Facebook: facebook.com/kaamadesi

NewTumbl: kamadesi.newtumbl.com


Enjoy this post?

Buy காமதேசி a coffee